சாலையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி தீவிரம்

நித்திரவிளை அருகே சாலையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி தீவிரம்

Update: 2022-05-29 20:29 GMT

கொல்லங்கோடு, 

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நித்திரவிளை அருகே உள்ள மேற்கு கடற்கரை சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மேலும், சாலையின் இருபுறமும் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பரிதவித்தனர். இதுபோல் ஏலாக்கரை பாணந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. எனவே, தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொல்லங்கோடு நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மின்மோட்டார் மூலம் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் தண்ணீரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே மழைநீர் ஓடை வழியாக குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்வதால் ஒருசிலர் ஓடையில் மணல் மூடைகள் அடுக்கி தடுப்பு அமைத்தனர். இதை பார்த்த பொதுமக்கள் சிலர் ஓடையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றக்கோரி போராட்டம் நடத்த முன்வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரை மின்மோட்டார் மூலம் அகற்றும் பணியை துரிதப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்