அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணி தீவிரம்

கோடை விடுமுறைக்கு பின் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணி தீவிரமாக நடந்தது.

Update: 2022-06-11 12:37 GMT

திருவண்ணாமலை

கோடை விடுமுறைக்கு பின் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணி தீவிரமாக நடந்தது.

நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு

கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டு (2021-22) நேரடி வகுப்புகள் சற்று தாமதமாக தொடங்கிய நிலையிலும், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வும், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வும் நடந்து முடிந்தது.

கோடை விடுமுறையும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து, 1 முதல் 10-ம் வகுப்பு வரையில் புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன.

இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். புதிய வகுப்பிற்கு கொண்டு செல்வதற்காக புதிதாக நோட்டு, பேனா, புத்தகபை போன்றவற்றை வாங்கி வருகின்றனர். மேலும் புதிய சீருடைகளும் வாங்கி வருகின்றனர்.

தூய்மை பணி

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளதால் பள்ளி வளாகம் தூய்மை செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை மூலம் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகள் தூய்மை பணியாளர்கள் உதவியுடன் பள்ளிகளின் வகுப்பறைகள், வளாகம், சுகாதார வளாகம் உள்ளிட்டவை தூய்மை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட பள்ளிக் கல்வி அலுவலர்களும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் அனுப்பும் பணியில் ஈடுட்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்