பாலம் அமைக்கும் பணி தீவிரம்
பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே மாதாங்கோவில்பட்டி கிராமத்திற்கும், உப்புபட்டி கிராமத்திற்கும் இடையில் வைப்பாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் இருந்தது. இந்த பாலத்தின் வழியே ராஜபாளையம், ஆலங்குளம், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் சென்று வருகின்றன. மழைக்காலங்களில் இந்த பாலத்தின் வழியாக தண்ணீர் செல்வதால் இந்த பகுதியில் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தற்போது தரைப்பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.