சென்னையில் ரெயில் நிலையங்களை அழகுபடுத்தும் பணி தீவிரம்
சென்னையில் ரெயில் நிலையங்களை அழகுபடுத்தும் பணி தீவிரம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,
சென்னையில் முக்கிய ரெயில் நிலையங்களான எழும்பூர் மற்றும் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் உள்பட 21 ரெயில் நிலையங்களை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இந்த ரெயில் நிலையங்களை சுற்றி செடி கொடிகள், கண் கவரும் பூக்கள், அலங்கார செடிகள் போன்ற தாவரங்கள் வளர்க்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்படி தாவரங்கள் வளர்ப்பதற்காக நடக்கும் வேலைகளால் ரெயில் நிலைய நடவடிக்கைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது எனவும், தண்டவாளம் அருகே எந்திர உபகரணங் களை பயன்படுத்தக்கூடாது எனவும், ரெயில் நிலையத்தின் சுற்றுப்புறத்தை பாதிக்காத வகையில் பணிகள் நடைபெற வேண்டும் எனவும் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.