மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதில் தீவிரம்: முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக அரசு தனித்துவமான “மாநிலக் கல்விக் கொள்கை” வடிவமைப்பதில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது" என்று தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2023-08-06 10:45 GMT

சென்னை,

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தின் வரலாறு, எதிர்கால இலக்கு, பொருளாதார வளர்ச்சி, தொழில்சார் சிந்தனைகளுக்கு ஏற்ப, தமிழக அரசு தனித்துவமான "மாநிலக் கல்விக் கொள்கை" வடிவமைப்பதில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. "தமிழக முதல்வரின் புத்தாய்வுத் திட்டம்" என்ற புதிய சீர்மிகு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்