டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
சோளிங்கர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எசையனூர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிகத்கையாக கொசு மருந்து அடித்தல், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வடிகால்வாய் தூர்வாருதல் ஆகிய பணிகள் நடைபெற்அறு வருகிறது. இந்த பணியை நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, ஆணையர் கன்னியப்பன், பொறியாளர் ஆசீர்வாதம், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.
மேலும் பயன்படாமல், பொதுமக்களுக்கு இடையூறாகவும் இருந்த தரை கிணறு, ஆழ்துளை கிணறுகளை மூட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நகராட்சி தலைவர் முன்னிலையில் அதே கிராமத்தின் மையப்பகுதியில் இருந்த பயன்படாத தரை கிணற்றை பொக்லைன் எந்திரம் மூலம் மூடும்பணி நடைப்பெற்றுது. தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சண்முகம், நகராட்சி கவுன்சிலர் கணேசன், துப்புரவு மேற்பார்வையாளர் நடராஜன் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.