பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம்

செம்பனார்கோவில் பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-04-11 18:45 GMT

பொறையாறு:

செம்பனார்கோவில் பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பருத்தி சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து கோடை சாகுபடியான உளுந்துபயறு, பாசிப்பருப்பு, பருத்தி, உள்ளிட்டவைகளை விவசாயிகள் சாகுபடி செய்து இருந்தனர்.

தற்போது செம்பனார்கோவில் வட்டார பகுதிகளான செம்பனார்கோவில், பரசலூர்,மேமாத்தூர்,கீழ்மாத்தூர்,திருவிளையாடம்,நல்லாடை,விளாகம், இலுப்பூர், விசலூர், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி விதைப்பு செய்து இருந்தனர்.

நல்ல விலை கிடைக்கும்

இந்த பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் அதிகளவில் தேவைப்படுவதில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விட வேண்டும். ஆற்றுபாசனத்தை பெரும்பாலும் நம்பியுள்ள மேற்கண்ட பகுதி விவசாயிகள், போர்செட் மூலமாகவும், பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். நான்கு நாட்களில் விதையானது முளைத்து 50 நாட்களில் பருத்தி பூ பூக்க ஆரம்பிக்கும், 100 நாட்களில் பருத்தியை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும் பணப்பயிரான பருத்திக்கு இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என்று நம்பிக்கையாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே பருத்தி விதைப்பு பணியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது செம்பனார்கோவில் வட்டார பகுதியில் விவசாயிகள்,விவசாய பெண் கூலித்தொழிலாளர்கள் மூலம் பருத்தி செடிகளுக்கு களை எடுக்கும், உரங்கள் இடும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்