ஒருங்கிணைந்த நுண்ணீர் பாசன கட்டமைப்பு:விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்பவானிசாகரில் 21-ந் தேதி நடக்கிறது

கருத்து கேட்பு கூட்டம்

Update: 2023-04-18 20:58 GMT

தமிழ்நாடு அரசு சார்பில் கீழ்பவானி பாசன பகுதியான பவானிசாகர், சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகளில் சோதனை முறையில் ஒருங்கிணைந்த நுண்ணீர் பாசன கட்டமைப்பு உருவாக்கி பயிர்சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான திட்ட பரிந்துரை தயாரிக்கப்பட்டு அரசின் ஆய்வில் உள்ளது. இந்த திட்டம் குறித்து விவசாயிகளின் கருத்துகளை அறியும் வகையில் பவானிசாகர் அருகே அக்கரை தத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் வருகிற 21-ந் தேதி பகல் 11 மணிக்கு பவானிசாகர் வட்டார அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அக்கரை தத்தப்பள்ளியை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம்.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்