தேசியக்கொடி அவமதிப்பு: முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு

தேசியக்கொடி அவமதிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மீதான வழக்கினை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-03 20:14 GMT

கோப்புப்படம்

சென்னை,

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, ஜெயலலிதா உடல் சவப்பெட்டியில் வைத்திருப்பது போல வடிவமைக்கப்பட்ட பெட்டியின் மீது தேசியக்கொடியை போர்த்தி, அதை ஒரு வாகனத்தில் வைத்து அப்போதைய அமைச்சர் மாபா பாண்டியராஜன் பிரசாரம் செய்தார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மாபா பாண்டியராஜன், அழகு தமிழ்செல்வி, குப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேசியக்கொடியை அவமதித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், மாபா பாண்டியராஜன் உள்பட 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், வக்கீல் பாபுமுருகவேல் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்துசெய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்