விவசாயிகள், ஆதார் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்
விவசாயிகள், ஆதார் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் நிதியுதவி திட்ட பயனாளிகள் 13-வது தவணை தொகையை தொடர்ந்து பெற, விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை அந்த திட்டத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 13-வது தவணை திட்டப்பலனை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை வருகிற 30-ந் தேதிக்குள் பிரதம மந்திரியின் கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவேற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 13-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணைகள் வழங்கப்படாது. விவரங்களை பதிவேற்றம் செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.