கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-நகராட்சி தலைவர் அறிவுறுத்தல்
கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனநகராட்சி தலைவர் அறிவுறுத்தினார்.
காரைக்குடி
காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை நகரில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தி வருகிறார். இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள சி.மெ.தெருவில் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் ேதாண்டப்பட்டு இருந்தது.
இந்த பணியை நகராட்சி தலைவர் முத்துத்துரை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஒப்பந்ததாரரிடம் தரமான முறையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நகர்மன்ற உறுப்பினர் சொ.கண்ணன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஜான்கென்னடி ஆகியோர் உடன் இருந்தனர்.