63 இடங்களில் மின்கம்பங்கள் நிறுவும் பணி
கே.வி.குப்பம் பகுதியில் 63 மின்கம்பங்கள் நிறுவப்பட்டன.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் பகுதியில் 63 மின்கம்பங்கள் நிறுவப்பட்டன.
பருவமழை தொடங்க உள்ள நிலையில் மோசமான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காட்பாடி மின்வாரிய கோட்ட அளவில் செயற்பொறியாளர் எல்.பரிமளா உத்தரவின்பேரில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் உதவி செயற்பொறியாளர் எஸ்.சுபாஷினி மேற்பார்வையில், உதவி மின் பொறியாளர் ஏ.அருள்சரவணன், கம்பியாளர் வே.வெங்கடேஷ் உள்ளிட்டோர் காந்திநகர், கே.வி.குப்பம், வடுகந்தாங்கல், காரணாம்பட்டு உபகோட்டங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல், தொய்வான கம்பி உள்ள பகுதி், இருகம்பங்களுக்கு இடையில் கூடுதல் மின்கம்பம் நிறுவுதல் என 63 இடங்களில் மின்கம்பங்கள் நிறுவப்பட்டன.========