மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஆய்வு
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஆய்வு செய்தார்.
மேட்டூர்:
தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மேட்டூர் பழைய அனல் மின் நிலையம், புதிய அனல் மின் நிலையம் ஆகியவற்றை நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவற்றை மேம்படுத்துவதற்கான பணிகள் குறித்து அவர் ஆய்வு நடத்தினார். அப்போது தலைமை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதாவது, நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரில் அனல்மின் நிலையத்தை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆய்வு நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.