போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
திருப்பத்தூர் பஜார் பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் கிருஷ்ணகிரி சாலை, பஜார் பகுதி, ஜின்னா ரோடு, புதுப்பேட்டை ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.
அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைப்பது குறித்தும், எந்த பகுதிகளில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான காரணம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலையம், டவுன் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைப்பது குறித்தும் அவர் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.