கரூரில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக திருமாநிலையூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆகியோர் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உடனிருந்தார்.