வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி மங்கத்ராம் சர்மா ஆய்வு செய்தார்.

Update: 2022-10-26 16:59 GMT

கண்காணிப்பு அதிகாரி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளருமான மங்கத்ராம் சர்மா தலைமை தாங்கினார்.

இதில் கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஆர்.டி.ஓ.க்கள் பிரேம்குமார், சிவக்குமார், ராஜா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், விவசாயிகளை கொண்டு குழுக்கள் அமைத்தல், ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் வளர்ச்சி திட்டங்கள், சமத்துவபுரம் சீரமைப்பு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் 3 நகராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணி

இதையடுத்து திண்டுக்கல் ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி செங்குளத்தை ரூ.18½ லட்சம் செலவில் தூர்வாரும் பணி, நாகம்பட்டி ஊராட்சி லவுகனம்பட்டியில் ரூ.77 லட்சத்து 30 ஆயிரம் செலவில் பாலம் கட்டும் பணி, சேனான்கோட்டை திருமலைகவுண்டன் குளம் ரூ.13½ லட்சம் செலவில் தூர்வாரும் பணி, குடகனாறு அணையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மதகுகள் ஆகியவற்றையும் கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம்சர்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்