முதியோர், குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு
முதியோர், குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு
கொரடாச்சேரி அருகே முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் கலெக்டர் சாருஸ்ரீ நேரில் ஆய்வு செய்தார். அப்போது அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
கலெக்டர் ஆய்வு
கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன்- பத்தூர் மேல்கரை முதியோர், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் முதியோர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், உணவு, மருத்துவம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சமையல்கூடம், குளியலறை, முதியோர்களை பராமரித்து வருவது தொடர்பான பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குழந்தையிடம் கலந்துரை
கொரடாச்சேரி ஒன்றியம் பத்தூர், மேல்கரை பகுதியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் மற்றும் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப்படும் சமையலறை, குளியலறை, கழிவறை வசதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குழந்தைகளிடம் கலந்துரையாடி, குழந்தைகளின் தேவைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கு சதுரங்க விளையாட்டிற்கான அட்டைகள் மற்றும் எழுதுபொருட்கள், புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.
அப்ேபாது மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.