விவசாய நிலங்களில் அதிகாரிகள் ஆய்வு

பொன்னை அருகே விவசாய நிலங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-12-20 18:47 GMT

வேலூர் மாவட்டம் பொன்னை ஊராட்சியில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ள விவசாயிகளின் நிலம் மற்றும் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை வேளாண் மற்றும் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பயிர் சேதங்கள் குறித்தும் கணக்கீடு செய்யப்பட்டது.

ஆய்வின் போது புள்ளியல் துறை ஆய்வாளர் பாலாஜி, வேளாண்மை உதவி அலுவலர் அசோக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்