வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார்ஜெயந்த் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை பணிகளான இ-பட்டா, இ-அடங்கல், கணினி சான்றிதழ்கள், வருவாய்த்துறை பதிவேடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார்ஜெயந்த் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது வாணியம்பாடி தாலுகாவில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். மேலும் பொதுமக்களுக்கு தடையின்றி அனைத்து சான்றிதழ்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார்.
ஆய்வின் போது கலெக்டர் அமர்குஷ்வாஹா, வருவாய் அலுவலர் வளர்மதி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் சம்பத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.