நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு
நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு
குன்னூர்
தமிழகம் முழுவதும் ெநடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு மேற்கொள்ள தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார். அதன்படி தணிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஊட்டி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள கோவை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர்(திட்டங்கள்) சரவணன் தலைமையில் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உதவி கோட்ட பொறியாளர் உமாசுந்தரி, உதவி பொறியாளர்கள் விக்னேஸ் ராம் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குன்னூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட எல்லநள்ளி மற்றும் மைனலா பகுதியில் சாலை மேம்பாடு, வடிநீர் கால்வாய் மற்றும் பாதுகாப்பு சுவர் ஆகிய பணிகள் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பார்வையிட்டு தணிக்கை குழுவினர் தரம் மற்றும் அளவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊட்டி நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் குழந்தை ராஜூ, குன்னூர் உதவி கோட்ட பொறியாளர் மூர்த்தி, உதவி பொறியாளர் பாலசந்திரன், தரக்கட்டுபாட்டு இளநிலை பொறியாளர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.