நீலிவனநாதர் கோவிலில் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு

நீலிவனநாதர் கோவிலில் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-23 19:32 GMT

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனநாதர் கோவிலுக்கு நேற்று மாலை இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் வந்து ராவணன் கோபுரம், மொட்டை கோபுரத்தின் மேலே சென்று அதன் உறுதித் தன்மை, அதனுடைய நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து யாகசாலை அமைக்கும் இடம், கோவிலில் எத்தனை தீர்த்த குளங்கள் உள்ளன என்பதையும் கேட்டறிந்தார். பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழி உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டார். முன்னதாக நீலிவனநாதர், எமதர்மன் சன்னதி, அம்பாள் சன்னதி ஆகியவற்றிற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர்கள் ஹரிஹரசுப்பிரமணியன், லட்சுமணன், திருச்சி மண்டல அரசு ஸ்தபதி கார்த்திக், கோவில் செயல் அலுவலர்கள் மனோகரன், ஜெய்கிஷன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், அரசு முதன்மை செயலாளருமான மணிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருச்சி மாநகரில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு நேரில் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்