கல்குவாரிகளில் கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

கல்குவாரிகளில் கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

Update: 2023-03-31 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் நெம்பர் 10 முத்தூர், சிங்கையன் புதூர், சொக்கனூர், வடபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சில கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக பாறைகள் உடைத்து எடுக்கப்படுவதாகவும், அதிக அளவில் வெடி மருந்துகள் பயன்படுத்துவதாகவும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்தநிலையில் கிணத்துக்கடவு அருகே நெம்பர் 10 முத்தூர் பகுதியில் உள்ள கல்குவாரிகளை கனிமவளத்துறை உதவி புவியியலாளர் மற்றும் துணை தாசில்தார் (கனிம வளம்) பிரேமலதா, வருவாய்த்துறையை சேர்ந்த கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, மண்டல துணை தாசில்தார் முத்து, கோவில்பாளையம் வருவாய் ஆய்வாளர் சித்ரா, நெம்பர்10 முத்தூர் கிராம நிர்வாக அதிகாரி குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கல்குவாரிகளுக்கு லைசென்ஸ் உள்ளதா?, அனுமதி வழங்கிய அளவிற்க்கு பாறைகள் உடைக்கப்பட்டு உள்ளதா? என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கல்குவாரி உரிமையாளர்களிடம் கனிமவளத்துறை வழங்கியுள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடித்து செயல்பட வேண்டும், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையூறு ஏற்படாதவாறு கல்குவாரிகள் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். கிணத்துக்கடவு பகுதியில் மொத்தம் 8 கல்குவாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்