ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து உதவி கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து உதவி கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-02-21 19:28 GMT

அரக்கோணம்

ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து உதவி கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரக்கோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் அரக்கோணத்தை அடுத்த இலுப்பை தண்டலம் கிராம விவசாயிகள் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கிராமத்துக்கு வரும் ஏரிக்கால்வாயில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், எனத் ெதரிவித்திருந்தனர். மனுைவ பரிசீலனை செய்த உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நெமிலி தாலுகா கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் இருந்து ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய் மற்றும் அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து புலத்தணிக்கை செய்தனர்.

ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் பிள்ளையார், தலைமை நில அளவர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், நில அளவர் அப்பு மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்