தொடர் விபத்து ஏற்படும் பகுதிகளில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

சிவகிரியில் தொடர் விபத்து ஏற்படும் பகுதிகளில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-07-12 16:35 GMT

சிவகிரி:

சிவகிரியில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரிக்கு வடக்கே மொட்டைமலை திருப்பம், சிவகிரி மில், பழைய போலீஸ் நிலையம் அருகே, தேவர் சிலை முன்பாக உள்ள வளைவு பகுதி, சிவகிரிக்கு தெற்கே தொட்டிச்சிமலையாறு பகுதி, வெற்றிலை மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் தென்காசி தலைமை இடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலிவரதன், விபத்து பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சிவகிரி இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசாருக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்