பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் பேராவூரணி சேது சாலை, முதன்மைச் சாலை, அறந்தாங்கி சாலை பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை செய்ய விண்ணப்பித்திருந்த 10 கடைகள் மற்றும் 2 தற்காலிக கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தீயணைப்பு நிலையங்களில் இருந்து தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளதா? என்றும் 2 தீயணைப்பு கருவிகள், 2 வாளிகளில் மணல், தண்ணீர் உள்ளதா? எனவும் கடைக்கு உள்ளே சென்று வெளியில் வர அவசர வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் புகைப்பிடிக்க கூடாது என்ற விளம்பரமும், லைசென்ஸ் வெளியில் தெரியும் வகையில் வைத்து இருக்க வேண்டும் என்றும் கோட்டாட்சியர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது பேராவூரணி தாசில்தார் சுகுமார், மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் கருப்பையன் ஆகியோர் உடனிருந்தனர்.