தர்மபுரி மாவட்டத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை ஊராட்சி துறை ஆணையாளர் ஆய்வு

Update: 2023-02-16 19:00 GMT

தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்திய ஊராட்சி துறை ஆணையர் பணிகளை தரமாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆணையாளர் ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையாளர் தாரேஸ் அகமது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி கடத்தூர் ஒன்றியத்தில் ரூ.3 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம், புட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.60 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, புட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் அனைவருக்கும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி, சிமெண்டு கல் பதித்து சாலை அமைக்கும் பணி, சிறு பாலம் கட்டும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.

தரமாக முடிக்க வேண்டும்

இதைத்தொடர்ந்து அரூர் ஒன்றியம் தீர்த்தமலை ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டார்.

இந்தப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தரமாக முடிக்க வேண்டும் என்று அப்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், என்ஜினீயர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்