பாலக்கோட்டில் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

Update: 2023-02-09 18:45 GMT

பாலக்கோடு:

காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, கனவனள்ளி பூமரத்துபள்ளம், 5-வது மைல்கல், ஆத்துக்கொட்டாய், கரகூர் ஆகிய பகுதிகளில் உள்ள டீ கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்பட 25-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கலப்பட தேயிலை, காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்