பட்டுக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-02-05 19:48 GMT

தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா பட்டுக்கோட்டை வட்டாரத்தில்நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்யப்பட்ட வயல்களையும், தென்னையில் ஊடுபயிராக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டதையும் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்யப்பட்டதையும் ஆய்வு செய்தார். மேலும் நெல் தரிசில் உளுந்து சாகுபடி இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு உளுந்து விதை மற்றும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னையில் ஊட்டச்சத்து மேலாண்மைக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் தக்கை பூண்டு மற்றும் பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். இந்த தகவலை பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்