கீழையூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கீழையூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-21 19:15 GMT

நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளருமான அருண்ராய் ஆய்வு மேற்கொண்டனர். மீனம்பநல்லூர் ஊராட்சி திருமணங்குடி பகுதியில் 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.3 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் தனி நபர் குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கும் பணிகள், கீழையூர் பகுதியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து தலைஞாயிறு அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். இதையடுத்து ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்று, வேளாண் கருவிகள், உளுந்து, பயறு, பாரம்பரிய நெல் விதைகளையும், ஜிங்க் சல்பேட் போன்ற இடுபொருட்களையும் வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ், வேளாண்மை துறை இணை இயக்குனர் அகண்ட ராவ், கீழையூர் அட்மா வட்டாரக்குழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்