தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் திருப்பணி-அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

Update: 2022-12-12 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி நகரில் பழமை வாய்ந்த கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு உரிய ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அறநிலையத்துறை இணை ஆணையர் மேற்பார்வையில் தர்மபுரி உதவி ஆணையாளர் உதயகுமார் மற்றும் அறநிலையத்துறை பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் திருப்பணிக்கான சாத்திய கூறுகள் குறித்து கோவிலில் ஆய்வு செய்தனர். பின்னர் வருகிற 27-ந் தேதி கோவிலில் பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது ஸ்ரீ வாரி சேவா டிரஸ்ட் தலைவர் டி.என்.சி.மணிவண்ணன், கோவில் செயல் அலுவலர் ராஜகோபால், சேவா டிரஸ்ட் நிர்வாகி கே.பி.எஸ்.சரவணன், கோவில் அர்ச்சகர் ரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்