வெற்றிலை தோட்டத்தை தோட்டக்கலை துணை இயக்குனர் ஆய்வு

வலங்கைமான் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட வெற்றிலை தோட்டத்தை தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் ஆய்வு செய்தார்.

Update: 2022-11-16 19:00 GMT

வலங்கைமான் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட வெற்றிலை தோட்டத்தை தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் ஆய்வு செய்தார்.

வெற்றிலை தோட்டங்கள்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி, ஆவூர் உள்ளிட்ட பகுதிகளில் 18 எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் வெற்றிலை பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் வலங்கைமான் பகுதியில், கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. குறைந்த மழை பெய்த போதிலும், பலமான காற்று வீசியதால் 1.60 எக்டேர் பரப்பிலான வெற்றிலை தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், 'மழையால் பாதிக்கப்பட்ட வெற்றிலை செடிகளை மேலும் நோய் தாக்காமல் தடுக்கலாம். இதற்கு காப்பர் ஆக்சி குளோரைடு என்ற பூஞ்சான் மருந்தை லிட்டர் ஒன்றுக்கு மூன்று கிராம் வீதம் கலந்து செடிகளுக்கு கைத்தெளிப்பான் மூலம் தெளித்து செடிகளை பராமரிக்க வேண்டும்' என்றார்.

கணக்கீடு

மேலும் அவர் மழை பாதிப்புகள் குறித்து உரிய கணக்கீடு செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, வலங்கைமான் தோட்டக்கலை அலுவலர் ரம்யா, உதவி அலுவலர்கள் விநாயகம், செல்வகுமார், வரதராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்