ஓசூரில் கால்வாய் பணியை அதிகாரி ஆய்வு

Update: 2022-11-04 18:45 GMT

மத்திகிரி:

ஓசூர் மாநகராட்சி 21-வது வார்டில் அன்னைநகர் முதல் எஸ்.எம்.நகர் வரை ரூ.25 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் தரம் குறித்து ஓசூர் மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது அவர் சிமெண்டு கலவையின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் மழை காலம் தொடங்கி உள்ளதால், பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஆய்வாளர் சீனிவாசா உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்