அரசு பள்ளிகளில்காலை உணவு தயாரிக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

Update: 2023-08-30 19:30 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தேவரசம்பட்டி, எர்ரப்பட்டி, அவ்வை நகர், தடங்கம் ஆகிய 4 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் மூலம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் பணியை நேற்று கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சமையல் கூடத்தை சுகாதாரமாக வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு தரமாக உணவு தயார் செய்து வழங்க வேண்டும். துறை அலுவலர்களை தவிர வெளி ஆட்களை உணவு தயாரிப்பு கூடத்தில் அனுமதிக்க கூடாது என கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்