சத்துணவு மையங்களில் உணவுக்கான செலவின தொகையை வழங்க வலியுறுத்தல்

சத்துணவு மையங்களில் உணவுக்கான செலவின தொகையை வழங்க வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-11-18 18:48 GMT

சத்துணவு மையங்களில் உணவுக்கான செலவின தொகையை வழங்க நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர்கள் பேரவை நிர்வாக குழு கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் இல.குமரேசன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் காளியப்பன், மகளிரணி செயலாளர் தமிழரசி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சாந்தி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உணவுக்கான செலவீட்டு தொகை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ளது. இது பணியாளர்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே செலவின மானியத்தை விரைந்து வழங்க வேண்டும். பணிக்கொடை போன்று ஓய்வு கால பலன்களை பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும். காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சத்துணவு மேலாளர் போன்ற பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிர்வாகிகள் சர்துல்லா, சித்ரா, கஜேந்திரன், இளமதி செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்