ஜெயங்கொண்டம் வழியாக ரெயில் பாதை அமைக்க வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம் வழியாக ரெயில் பாதை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-09-22 18:53 GMT


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார். ராஜகோபால் வரவேற்றார். தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் பாஸ்கர் கலந்துகொண்டு, வங்கி சேவைகள் பற்றி விளக்கி பேசினார். வட்ட செயலாளர் கலியமூர்த்தி அறிக்கையினை வாசித்தார். பொருளாளர் ராமமூர்த்தி இயக்க வரவு-செலவை வாசித்தார். நிதிஉதவி திட்ட வரவு-செலவை ராமசாமி வசித்தார். கூட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்திற்கு ரெயில் பாதை அமைக்க ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.வும், போக்குவரத்துத்துறை அமைச்சரும் விரைந்து ஆவனம் செய்ய வேண்டும். அரியலூரில் இருந்து நெய்வேலிக்கு செல்லும் ராட்சத லாரிகள் ஜெயங்கொண்டம் நகருக்குள் வராமல் துளாரங்குறிச்சி- கழுவந்தோண்டி- சின்னவளையம் வழியாக செல்லும் புறவழிச் சாலையை பயன்படுத்தி மீன்சுருட்டி வழியாக நெய்வேலிக்கு செல்ல வேண்டும். ஜெயங்கொண்டம் நகரில் உள்ள உணவு விடுதிகளில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜெயங்கொண்டம் நகரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி பென்சனர்களுக்கு 70 வயது நிரம்பிய நிலையில் 10 சதவீத கூடுதல் பென்ஷன் வழங்கவும், அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை திரும்ப நடைமுறைப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்