லால்குடியில் நாய்கள் தொல்லை நடவடிக்கை எடுக்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

லால்குடியில் நாய்கள் தொல்லையை தடு்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-11-30 19:38 GMT

லால்குடி நகராட்சி கூட்டம் அதன் தலைவர் துரை மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சுகுணா ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் 24 வார்டுகளிலும் பெயர் பலகை வைக்க வேண்டும். நகராட்சி அனைத்து வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே நகராட்சி சார்பில் நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கொசு தொல்லை அதிகம் இருப்பதால் உடனடியாக கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் மருதமலை வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து தலைவர் பேசுகையில், அனைத்து வார்டுகளிலும் தெருக்களின் பெயர் பலகை வைக்கும் வேலை நடந்து வருகிறது. அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கப்படும். தெருக்களில் உள்ள நாய்களை பிடிக்க நகராட்சிக்கு அதிகாரம் இல்லை என்றார். கூட்டத்தில் அதிகாரிகள், அனைத்து கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்