ஐ.என்.எஸ். கடற்படைதள அலுவலகஊழியர் பாம்பு கடித்து சாவு

ஐ.என்.எஸ். கடற்படை தள அலுவலக ஊழியர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-31 20:02 GMT

வள்ளியூர் (தெற்கு):

ஐ.என்.எஸ். கடற்படை தள அலுவலக ஊழியர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தார்.

ஊழியர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி செல்வம் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 59). இவர் விஜயநாராயணத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தள அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வள்ளியூர் தெற்குரத வீதியில் சொந்தமாக வீடு வாங்கி குடும்பத்துடன் வசித்து வந்தார்.

பாம்பு கடித்து சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவராமன் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 4.45 மணியளவில் சிவராமனை பாம்பு கடித்துள்ளது. அதை அறிந்த அவர் திடுக்கிட்டார்.

பின்னர் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்