பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை
மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தினார்.
நாட்டறம்பள்ளி ஒன்றியம் ஆத்தூர்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழரைப்பட்டி மற்றும் ஜங்களாபுரம் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் வருவாய்த் துறையினர் 30 மாற்றுத்திறனாளிகள் வசித்து வரும் பகுதிக்கு நேரில் சென்று இலவச வீட்டுமனை பட்டா வழங்க தகுதியான மாற்றுத்திறனாளிகள் குறித்து விசாரணை செய்தனர்.
நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.