புத்தாக்க பயிற்சி

புத்தாக்க பயிற்சி நடைபெற்றது

Update: 2023-07-25 19:15 GMT

இளையான்குடி,

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக செஞ்சிலுவைச் சங்க தொடக்க விழா மற்றும் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக இந்திய செஞ்சிலுவைச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தவசிலிங்கம் கலந்துகொண்டு செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து பேசினார்.

மேலும் கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரி உதவி பேராசிரியர் சுலைமான் கலந்துகொண்டு பேசினார். இறுதியாக செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் நர்கீஸ் பேகம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்