புதுமை புனித சந்தனமாதா சப்பர பவனி

கயத்தாறு புதுமை புனித சந்தனமாதா சப்பர பவனி நடந்தது.

Update: 2023-02-12 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு புதுமை புனித சந்தனமாதா ஆலய திருவிழா கடந்த 9-ந்தேதி பங்குத்தந்தை எரிக்ஜோ தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவில் ஜெபவழிபாடு நடைபெற்றது. 10-ந்தேதி விளக்கு பூஜை நடந்தது.

11-ந்தேதி சிறப்பு வழிபாடு, பிரார்த்தனையை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் சந்தனமாதாவிற்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இரவில் மாதா சப்பர பவனி தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று நள்ளிரவு மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. வழிநெடுகளிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் திரண்டிருந்து மாலை அணிவித்து வணங்கினர்.

விழாவில் கயத்தாறு, தஞ்சாவூர், சென்னை, சிவகாசி, நெய்வேலி, விருதுநகர், நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று வழிபாடு நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்