சிப்காட் தொழிற்பூங்காவில் புத்தாக்க மையம்

ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் புத்தாக்க மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2022-06-25 16:21 GMT

ஓசூர்:

ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் புத்தாக்க மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

புத்தாக்க மையம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில்துறை சார்பில், சென்னை தரமணி டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் கலந்து கொண்டு, ஸ்ரீ பெரும்புதூர் மற்றும் ஓசூரில் சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.33.46 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள புத்தாக்க மையத்தில், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, குத்துவிளக்கேற்றி வளாகத்தை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., சிப்காட் திட்ட அலுவலர் வெங்கடேசன், உதவி பொறியாளர் ரேணுகா உள்ளிட்ட அதிகாரிகள், ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன், ஓசூர் இன்டஸ்டிருப் அசோசியேசன் தலைவர் ராஜகோபாலன், பழனிகுமார் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ரூ.12,655 கோடி முதலீடு

பின்னர் கலெக்டர் கூறுகையில், இந்த சிப்காட் தொழிற்பூங்காவில் மொத்தம் 363 தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகள் ரூ.12,655 கோடி முதலீடு செய்து, அதில் 33 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பில் உள்ளனர். தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழிலை மேம்படுத்துவதற்காக கோவையை சேர்ந்த போர்ட்ஜ் என்ற நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்