பட்டாசு வெடி விபத்தில் 17 பேர் காயம்
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் 17 பேர் காயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளி சமயத்தில் பட்டாசு விபத்துக்களால் காயம் அடைபவர்களுக்கு, 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் உள்ளிருப்பு மருத்துவர் செல்வி தலைமையில், டாக்டர் முருகன் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்ததில் கடந்த, 3 நாட்களில் 17 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களுக்கு தீக்காயம் சிறிய அளவில் மட்டுமே இருந்ததால், சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இவ்வாறு அவர்கள் கூறினர்.