விபத்தில் காயமடைந்ததி.மு.க. கவுன்சிலர் சாவு
தேனியில் விபத்தில் காயமடைந்த தி.மு.க. கவுன்சிலர் பரிதாபமாக இறந்தார்.
தேனி பாரஸ்ட்ரோடு 7-வது தெருவை சேர்ந்தவர் பிரிட்டிஷ் (வயது 54). இவர் தேனி அல்லிநகரம் நகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் ஆவார். மேலும் இவர் தேனி மேற்கு சந்தையில் மரக்கடை நடத்தி வந்தார். கடந்த 21-ந்தேதி இவர் கடையில் இருந்து வீட்டுக்கு தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்த அவர் தேனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றார்.
நேற்று முன்தினம் ஸ்கேன் எடுத்துவிட்டு வழக்கம்போல் கடைக்கு சென்று விட்டார். அப்போது அவர் கடையில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். அவருடைய உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் அமர்நாத் (25) தேனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.