தொப்பூரில்சாலையோர வீட்டின் மீது பஸ் மோதி 3 பேர் காயம்

Update: 2023-04-27 19:00 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தொப்பூர் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 38). இவர் தொப்பூர் செக்போஸ்ட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அட்டை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கார்த்தி, அவருடைய தாய் சின்னகண்ணு, தம்பி மணிகண்டன் ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் சாலையோர அட்டை வீட்டின் மீது மோதியது.

இந்த விபத்தில் அட்டை வீடு சேதமடைந்ததில் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த கார்த்தி, சின்னகண்ணு, மணிகண்டன் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்