கொண்டத்து காளியம்மன் ேகாவில் தற்காலிக கடைகளின் மேற்கூரை சரிந்து 3 பேர் காயம்

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் ேகாவில் திருவிழாவுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-04-10 18:36 GMT

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் ேகாவில் திருவிழாவுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

திருவிழா கடைகள்

திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் பிரசித்திபெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கோவில் நிர்வாகமே கடைகள் அமைத்து வசூல் செய்வது வழக்கம். இந்த வருடம் கடைகள் ரூ.7 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

கோவில் வளாகத்தில் தற்காலிகமாக 200 அடி நீளம், 80 அடி அகலம் அளவில் மேற்கூரை அமைத்து 256 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கடைகள் அனைத்தும் மார்ச் 31-ல் இருந்து கடந்த 8-ந்தேதி வரை பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில் திருவிழா முடிந்து கூடுதலாக ஒரு நாள் வியாபாரிகள் கடை வைத்திருந்தனர்.

மேற்கூரை சரிந்தது

நேற்று காலை கடைக்காரர்கள் பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடைகளின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பெரும்பாலான கடைகள் ஏற்கனவே காலி செய்யப்பட்டு விட்டநிலையில் மீதம் இருந்த சுமார் 150 கடைகளில் பொருட்கள் சேதம் அடைந்து வீணானது.

மேலும் பொருட்கள் ஏற்றி கொண்டிருந்த சரக்கு ஆட்டோக்கள் மீதும் மேற்கூரைகள் விழுந்தது. தகவல் அறிந்ததும் பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பொருட்கள் சேதம்

விபத்தில் காயமடைந்த தமிழ்ச்செல்வி என்ற பெண் கூறுகையில், குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து வந்து நான் பொம்மை கடை போட்டு இருந்தேன். வியாபாரம் முடிந்த நிலையில் நேற்று காலை அனைத்து பொருட்களையும் ஆட்டோவில் ஏற்றி வைத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென மேற்கூரை சாய்ந்தது. சரக்கு ஆட்டோக்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருக்கும் போது மேற்கூரை சரிந்து ஆட்டோக்களில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினோம். எங்களுக்கு ஏற்பட்ட பொருட் சேதத்துக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்