பாலக்கோட்டில் அனுமதியின்றி நடந்தஎருதாட்டத்தில் மாடு முட்டியதில் 9 பேர் காயம்

Update: 2023-03-09 19:00 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 4-ம் நாளான நேற்று எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் எருதாட்டத்துக்கு அனுமதி மறுத்திருந்த நிலையில் அதனை மீறி எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது.

இதில் வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவரின் மாட்டை கயிறு பிடிக்காமல் அவிழ்த்து விட்டதால் சுற்றிநின்ற பொதுமக்களை முட்டியது. இதில் கொண்டசாமனஅள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 55), முனியப்பன் (42), தீத்தார அள்ளியை சேர்ந்த திவ்யா (19) ஆகிய 3 பேருர் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் பாலக்கோடு கமால் சாகிப் தெருவை சேர்ந்த சிறுவன் மாபூப்பாஷா (15), மந்திரி கவுண்டர் தெருவை சேர்ந்த சக்திவேல் (17), பனாரஸ் தெருவை சேர்ந்த தன்சிம் (22), கொட்டுமாரனஅள்ளியை சேர்ந்த ராணி (47), அண்ணா நகரை சேர்ந்த சண்முகம் (28) ஆகிய 6 பேர் காயம் அடைந்து பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து போலீசார் வாழைத்தோட்டத்தை சேர்ந்த எருது உரிமையாளரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

==========

Tags:    

மேலும் செய்திகள்