கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23 ஆம் ஆண்டு கரும்பு அரைவையை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார். அப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரவை செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23 ஆம் ஆண்டு கரும்பு அரைவையை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார். அப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரவை செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கரும்பு அரவை தொடக்கம்
ஆலையில் 2022-23-ம் ஆண்டு 1,30,000 மெ.டன்கள் கரும்பு அரைவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் டன் ஒன்றுக்கு ரூ.3,065/- வழங்கப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் தகவல்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வட்டம் கேத்தாண்டப்பட்டி பகுதியில் செயல் பட்டு வரும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23- ஆம் ஆண்டு கரும்பு அரைவை தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா கரும்பு அரவையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஜோலார்பேட்டை க.தேவராஜி, திருப்பத்தூர் அ.நல்லதம்பி மற்றும் தே.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் அ.மீனாபிரியா தர்ஷினி வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு பின் கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறியதாவது:-
1.30 லட்சம் மெட்ரிக் டன்
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23-ம் ஆண்டு அரவைக்கு கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து 10,000 மெட்ரிக் டன்களும், கள்ளக்குறிச்சி-11 கூட்டுறவு சரக்கரை ஆலையிலிருந்து 15,000 மெட்ரிக் டன்களும், திருப்புத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து 1,05,000 மெட்ரிக் டன்களும் என மொத்தம் 1,30,000 மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 2022-23-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்திற்கு திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தமிழ்நாட்டில் அதிக அளவாக டன் ஒன்றுக்கு ரூ.3,065 வழங்கப்படவுள்ளது. எனவே அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்து ஆலையின் முழு அரைவைத்திறன் அளவிற்கு கரும்பு பதிவு செய்திட வேண்டும். கேட்டுக்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், இணை இயக்குனர் (பொறுப்பு) பச்சையப்பன், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சிந்துஜா ஜெகன், உமாகன்ரங்கம், கவிதா தண்டபாணி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.