அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை

அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

Update: 2023-05-07 19:00 GMT

அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

வகுப்பறை கட்டிடங்கள்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஏர்வாடி ஊராட்சி விச்சூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன.

இதேபோல் திருப்புகலூர் ஊராட்சி மேலப்பகுதி கிராமம் மற்றும் சன்னதி தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தலா ரூ.10 லட்சத்து 93 ஆயிரம் என ரூ.21 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் 2 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இதை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைத்தார்.

அப்போது முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

அடிப்படை கட்டமைப்புகள்

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

நாகை மாவட்டத்தில் 30 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணி நடந்து வருகிறது.

பள்ளிகளில் உட்கட்டமைப்பு பணிகளுக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் சமையல் கூடம், மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை ்எடுக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்து, அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்லக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்