தேசிய தரவுதளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 100 சதவீதம் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய தொழிற்சங்கத்தினர் ஒத்துழைக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் கூறினார்.

Update: 2022-07-29 15:21 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 100 சதவீதம் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய தொழிற்சங்கத்தினர் ஒத்துழைக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் கூறினார்.

விளக்க கூட்டம்

அமைப்புசாரா தொழிலாளர்களை தேசிய அளவில் கண்டறியவும், அவர்களின் விவரங்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், மத்திய அரசின் அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களின் உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக தனியாக தேசிய தரவு தளம் (eSHRAM.NDUW) உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த தளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களை 100 சதவீதம் பதிவு செய்யும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடனான விளக்க கூட்டம் நடந்தது.

100 சதவீதம்

கூட்டத்துக்கு தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பதிவ முகாம்களில் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். அமைப்புசாரா தொழிலாளர்களை 100 சதவீதம் தரவு தளத்தில் பதிவு செய்ய ஒத்துழைக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுவதன் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் அனைத்து சலுகைகளும் நேரடியாக பயனாளிகளுக்கு கிடைக்கும். இந்த பதிவு செய்ய வருங்கால வைப்பு நிதி மற்றும் மாநில ஈட்டுறுதி கழகத்தில் உறுப்பினர் அல்லாத தொழிலாளர்கள் தங்கள் ஆதார் எண், அதனுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மற்றும் வங்கி புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு பயனாளிக்கு தனித்துவ அடையாள எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்