காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்

சிவகிரி அருகே காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-03-11 18:45 GMT

சிவகிரி:

தென்காசி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பாக காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் சிவகிரி அருகே ராமநாதபுரம் ஊராட்சி மன்ற கூட்டரங்கில் நடந்தது. வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாவட்ட நலக்கல்வியாளர் ஆறுமுகம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, சுகாதார ஆய்வாளர் பாரத், ராமநாதபுரம் ஊராட்சி செயலாளர் முருகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்